லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கேண்டி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்...!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பி-லவ் கேண்டி அணியை வீழ்த்தி கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வெற்றி பெற்றது.;

Update:2023-08-01 09:29 IST

Image Courtesy: @LPLT20

கொழும்பு,

லங்கா பிரீமியர் லீக் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பி-லவ் கேண்டி - கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது.

கொழும்பு அணி தரப்பில் பாபர் ஆசம் 59 ரன், நுவனிது பெர்னாண்டோ 28 ரன்கள் எடுத்தனர். கேண்டி அணி தரப்பில் உதானா 3 விக்கெட், முகமது ஹஸ்னைன் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேண்டி அணி களம் இறங்கியது.

கேண்டி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தனுகா தாபரே 4 ரன், தினேஷ் சண்டிமால் 10 ரன், அடுத்து களம் இறங்கிய காமிண்டு மெண்டிஸ் 15 ரன், ஏஞ்சலோ மேத்யூஸ் 25 ரன், அஷேன் பண்டார 12 ரன், ஹசரங்கா 9 ரன், சர்ப்ராஸ் அகமது 16 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் கேண்டி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 130 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கேண்டி அணியை 27 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொழும்பு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்