லங்கா பிரீமியர் லீக்: பாபர் ஆசம் அதிரடி சதம்...காலே டைட்டன்சை வீழ்த்தி கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி..!

கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசம் 104 ரன்கள் அடித்தார்.;

Update:2023-08-07 19:36 IST

Image Courtesy: @LPLT20

கொழும்பு,

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் காலே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் காலே டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

காலே அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய லசித் குரூஸ்புல்லே 36 ரன், ஷெவான் டேனியல் 49 ரன், அடுத்து களன் இறங்கிய பானுகா ராஜபக்சே 30 ரன், டிம் செய்பர்ட் 54 ரன் எடுத்தனர். இதன் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 189 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி களம் இறங்கியது. கொழும்பு அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய  பாபர் ஆசம், பதும் நிசாங்கா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பதும் நிசாங்கா 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய பெர்னாண்டோ 8 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய பாபர் ஆசம் சதம் அடித்து அசத்தினார். பாபர் ஆசம் 59 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட  104 ரன் குவித்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் கொழும்பு அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 189 ரன் குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் 2 வது வெற்றியை பதிவு செய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்