நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்

நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-03-29 15:31 IST
நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்

image courtesy:twitter/@ICC

காத்மாண்டு,

நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மாண்டி தேசாய் கடந்த பிப்ரவரி மாதத்துடன் பதவி விலகினார். இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் நேபாள கிரிக்கெட் வாரியம் இறங்கியது.

இந்நிலையில் நேபாள கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் லா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்