ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடிய கோலி - வைரலாகும் வீடியோ...!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2023-03-18 09:07 GMT

மும்பை,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 188 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இந்தியா முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இதையடுத்து 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராகுல்-ஜடேஜா ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இந்த போட்டியில் இந்தியா பீல்டிங் செய்து கொண்டிருந்த போது விராட் கோலி ஸ்லிப்பில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலின் நடன அசைவுகளை போட்டிருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர் விருதை பெற்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்