"கனா படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது" - ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியின் கேப்டன் தீர்த்தா
மகளிர் ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஐக்கிய அரபு அமீரக அணி அண்மையில் தகுதி பெற்றது.;
துபாய்,
மகளிர் ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஐக்கிய அரபு அமீரக அணி அண்மையில் தகுதி பெற்றது. அந்த அணியின் கேப்டனும், தமிழகத்தில் பிறந்தவருமான தீர்த்தா சதீஷ் அணி வெற்றிக்கு வழிநடத்தி பலரது கவனத்தை ஈர்த்தார்.
அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பள்ளி பருவத்தில் ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடி வந்ததாகவும், ஜூனியர் அணியில் விளையாட முதலில் வாய்ப்பு வந்த போது தயக்கமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
எனினும் கனா படம் தனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதனை பார்த்த பிறகு தான் கடுமையாக முயன்று ஐக்கிய அரபு அமீரக ஜூனியர் அணிக்குள் நுழைந்ததாகவும் கூறி நெகிழ்ந்தார்.