ஐபிஎல் 2023க்கான ஏலத்தை இஸ்தான்புல் நகரில் நடத்த முடிவு?- வெளியான தகவல்

இஸ்தான்புல் நகரில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-10-26 17:05 GMT

Image Courtesy: PTI 

மும்பை,

உலக கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற முன்னணி கிரிக்கெட் தொடர்களில் ஐ.பி.எல் தொடரும் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மினி ஏலம் நடத்தப்படவுள்ளதாகவும், டிசம்பர் 16 ஆம் தேதி இந்த ஏலம் நடைபெறலாம் எனவும் கடந்த வாரம் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் இஸ்தான்புல் (துருக்கி), பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய 5 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் நடைபெறலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிசிசிஐ தற்போது வரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் இஸ்தான்புல் நகரில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு 2 அணிகள் ஐபிஎல் தொடரில் அறிமுகமான காரணத்தால் அதற்காக மெகா ஏலம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை "மினி ஏலம்" நடைபெறவிருக்கிறது. இந்த தகவலை பிசிசிஐ உறுதிசெய்யும் பட்சத்தில் ஒரு வருடத்தில் இரண்டு முறை ஐபிஎல் ஏலம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். 

Tags:    

மேலும் செய்திகள்