இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் தர்மசாலாவில் நடைபெறுவதில் சிக்கல் ?

முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2023-02-11 10:48 GMT

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட், தர்மசாலாவில் மார்ச் 1 முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தர்மசாலா ஆடுகளத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் டெஸ்ட் போட்டி, இடம் மாற்றப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

அவ்வாறு, இடமாற்றப்பட்டால் விசாகப்பட்டினம், ராஜ்கோட், புணே, இந்தூர் ஆகிய நகரங்கள் 3-வது டெஸ்டுக்கான பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்