டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர்

டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பால் ஸ்டிர்லிங் படைத்துள்ளார்.

Update: 2024-03-16 10:07 GMT

image courtesy: twitter/@ICC

துபாய்,

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. அதில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 பவுண்டரிகள் உட்பட 25 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் அடித்த 2 பவுண்டரிகளையும் சேர்த்து இதுவரை டி20 போட்டிகளில் அவர் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை 401 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. பால் ஸ்டிர்லிங் - 401 பவுண்டரிகள்

2. பாபர் ஆசம் - 395 பவுண்டரிகள்

3. விராட் கோலி - 361 பவுண்டரிகள்

4. ரோகித் சர்மா - 359 பவுண்டரிகள்

5.டேவிட் வார்னர் - 320 பவுண்டரிகள். 

Tags:    

மேலும் செய்திகள்