டி20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2024-05-08 09:04 GMT

Image Courtesy: @ICC

டப்ளின்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும்,  இதையடுத்து   அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரிலும் ஆட உள்ளன.

இந்நிலையில்  பாகிஸ்தானுக்கு எதிரான தொடர், முத்தரப்பு டி20 தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரில் ஆடி வரும் ஜோஷ் லிட்டில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் முத்தரப்புக்கு டி20 தொடருக்கான அயர்லாந்து அணி விவரம்; பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடெய்ர், ரோஸ் அடெய்ர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணி விவரம்; பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடெய்ர், ரோஸ் அடெய்ர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.



Tags:    

மேலும் செய்திகள்