ஐபிஎல் மினி ஏலம்: 991 பேர் ஏலத்தில் பங்கேற்க பதிவு... 87 வீரர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு....!

ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-12-02 02:17 GMT

Image Courtesy: IndianPremierLeague

மும்பை,

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கு பெற வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் நாள் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அவர்களில் 741 பேர் இந்தியர்கள் ஆவர். 14 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் ஐபிஎல்லில் பங்கு பெற பதிவு செய்துள்ளனர். அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து அதிகபட்சமாக 57 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீசில் இருந்து 33 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 31 வீரர்களும், நியூசிலாந்தில் இருந்து 27 வீரர்களும், இலங்கையில் இருந்து 23 வீரர்களும், ஆப்கானிஸ்தானில் இருந்து 14 வீரர்களும், அயர்லாந்தில் இருந்து 8 வீரர்களும், வங்கதேசம், ஜிம்பாப்வே, யுஏயில் இருந்து தலா 6 வீரர்களும், நமிபியாவில் இருந்து 5 வீரர்களும், ஸ்காட்லாந்தில் இருந்து 2 வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய முடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்க வைத்துக்கொண்ட வீரரகளை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை மட்டும் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

பதிவு செய்த 991 வீரர்களில் 185 பேர் அவர்கள் சொந்த நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியவர்கள், 786 பேர் சர்வதேச போட்டிகளில் ஆடாதவர்கள், 20 பேர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

சர்வதேச போட்டிகளில் ஆடிய 185 பேரில் 19 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இதை போன்று சர்வதேச அனுபவம் இல்லாத, ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்கள் 91 பேர் இந்த ஏலத்தில் பங்கு பெற தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்