ஐபிஎல் : கால்பந்து அணியின் ஜெர்சியில் விளையாடும் லக்னோ..!

சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த பிரத்யேக ஜெர்சியில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-18 11:14 GMT

ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. வரும் 20-ம் தேதி கொல்கத்தா உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் லக்னோ - கொல்கத்தா ;அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணி, இந்தியாவின் கால்பந்து கிளப் அணியான மோஹன் பகான் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த பிரத்யேக ஜெர்சியில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ மற்றும் மோஹன் பகான் கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக ஆர்பிஎஸ்ஜி குழும தலைவர் சஞ்சீவ் கோயங்கா உள்ளார். அதனால் சிறப்பு ஜெர்சியை அணிந்து லக்னோ அணி விளையாடுகிறது.

நடந்து முடிந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மோஹன் பகான் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் அந்த அணியை பெருமைப்படுத்தும் விதமாக லக்னோ அணி, மோஹன் பகான் அணியின் பிரத்யேக ஜெர்சியில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்