ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியிலிருந்து இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் விலகல்
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லக்னோ,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மாவி காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் இவருக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஷிவம் மாவியை கடந்த வருடம் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 6.4 கோடி கொடுத்து லக்னோ அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.