ஐபிஎல்: குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! காரணம் என்ன ?

குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

Update: 2023-04-14 11:09 GMT

பஞ்சாப்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்று நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதின.டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

இந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாமல் தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்