மழை காரணமாக ஐபிஎல் இறுதிப்போட்டி நாளைக்கு ஒத்திவைப்பு

ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் நாளை இரவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-28 17:37 GMT

அகமதாபாத்,

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற இருந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன.

இதனிடையே, அகமதாபாத்தில் இன்று கனமழை பெய்து வருகிறது. இறுதிப்போட்டி நடைபெற உள்ள மைதானம் அமைந்துள்ள பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று நடைபெற இருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது,

ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் நாளை இரவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்