ஐபிஎல் 2023: சென்னை, மும்பை அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் முழு விவரம்

சென்னை மற்றும் மும்பை அணிகள் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது.

Update: 2022-11-15 13:40 GMT

Image Tweeted By ChennaiIPL/ mipaltan

மும்பை,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏனென்றால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.

இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை இன்றைக்குள் ( நவம்பர் 15) சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிந்துள்ளதால் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வரிசையாக வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தாங்கள் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் தக்கவைத்த வீரர்கள்:

ரோஹித் ஷர்மா , இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேய சிங், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்

சென்னை அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: மகேந்திர சிங் தோனி , ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி

சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவிக்கப்பட்ட வீரர்கள்: டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு)


Tags:    

மேலும் செய்திகள்