இது மட்டும் நடந்தால்.... இந்திய அணிதான் டி20 உலகக் கோப்பையை வெல்லும் : ரெய்னா கணிப்பு
சுரேஷ் ரெய்னா இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்புகள் குறித்து கூறியுள்ளார்.
16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிரள்கொள்கிறது.இந்திய அணி வீரர்கள் தொடர்நது தீவீர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்புகள் குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது ;
பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நிச்சயம்.இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும்.இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர், விராட் கோலி மிகவும் நன்றாக இருக்கிறார். ரோஹித் சர்மா மிகச் சிறந்த கேப்டன் , முதல் போட்டியில் வெற்றி பெற்றால், அது நமக்கு நல்ல உத்வேகம் கொடுக்கும் . நாட்டில் உள்ள அனைவரும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்,இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஜஸ்பிரித் பும்ரா அல்லது ரவீந்திர ஜடேஜாவை உங்களால் மாற்ற முடியாது என்பதால் நான் அவரை சரியான மாற்றாக அழைக்கமாட்டேன். அவர்கள் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் உங்களுக்கு இருந்த சிறந்த தேர்வாக (ஷமி )அவரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். ஷமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல ஃபார்மில் உள்ளார் .போட்டிக்கு 15 நாட்களுக்கு முன்னதாக அணியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி பிசிசிஐ சிறப்பாக செயல்பட்டது. மைதானம் பெரியது, இந்திய அணி பயமற்ற கிரிக்கெட்டை விளையாடி நல்ல எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும், "
தினேஷ் கார்த்திக் நல்ல பார்மில் இருக்கிறார், அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.ரிஷப் பண்ட் அணியில் இருந்தால் , அணிக்கு முக்கிமாக இருக்கும்
2007 டி20 உலகக் கோப்பையில் கவுதம் கம்பீர் சிறப்பாக விளையாடினார் என்பதை பார்த்தோம். 2007 டி20 உலகக் கோப்பை. யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தார் . பின்னர் 2011 உலகக் கோப்பையில் இருவரும் பெரிய பங்கு வகித்தனர். எனவே, இடது கை பேட்டராக இருப்பது உங்களுக்கு அந்த நன்மையை அளிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.ரிஷப் பண்ட் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்." இவ்வாறு கூறினார்