இந்தியா வெற்றி பெற 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது குறித்து யோசிக்க வேண்டும் - அனில் கும்ப்ளே

ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகியுள்ள நிலையில் குல்தீப் யாதவ் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-30 09:23 GMT

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள 2-வது போட்டியில் இந்தியா வெல்வதற்கு 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது குறித்து யோசிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகியுள்ள நிலையில் குல்தீப் யாதவ் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"உங்களுக்கு 4-வது ஸ்பின்னர் தேவையா என்பது எனக்கு உறுதியாக தெரியாது. ஆனால் ஒருவேளை இந்தியா 1 வேகப்பந்து வீச்சாளர் மட்டும்போதும் என்று நினைத்தால் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும். அவரிடம் நிறைய வேரியேஷன்கள் இருக்கிறது. ஐதராபாத்தில் வென்ற இங்கிலாந்து மறுபடியும் அதே திட்டத்துடன் இந்த போட்டியில் விளையாட வரும். விசாகப்பட்டினம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கலாம். எனவே 2-வது போட்டியில் இந்தியா வெல்வதற்கு 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது குறித்து யோசிக்க வேண்டும்

இருப்பினும் ஐதராபாத்தை விட அங்கே சற்று வேகம் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எந்த மைதானத்திலும் சிறப்பாக விளையாட நீங்கள் உங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தியா சுழலுக்கு எதிராக விளையாடுவதில் தங்களுடைய அணுகுமுறையை வலுவாக அமைக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய பேட்ஸ்மேன்களில் சிலர் நேர்மறையாக விளையாடவில்லை. அவர்களுடைய புட் வொர்க் கூட எதிர்பார்த்த அளவு முதல் டெஸ்ட் போட்டியில் இல்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்