ஆசிய கோப்பை: ஷார்ஜாவில் விளையாட இந்திய அணிக்கு பயமா?- முன்னாள் பாகிஸ்தான் வீரர் கேள்வி

இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாய் மைதானங்களில் மட்டும் நடைபெறுகின்றன.

Update: 2022-09-04 11:01 GMT

Image Courtesy: AFP

சென்னை,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2-வது லீக் ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கையும் தோற்கடித்து 'ஏ' பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில் துபாயில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சார்ஜா மற்றும் துபாயில் உள்ள மைதானங்களில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளும் துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற்று உள்ளது. இனி இந்திய அணிக்கு வரவிருக்கும் போட்டிகளும் துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மற்ற அணிகள் சார்ஜா மற்றும் துபாய் என 2 மைதானத்தில் விளையாடும் போது இந்தியா மட்டும் துபாயில் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சிகந்தர் பாக்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி ஏன் துபாயில் மட்டும் விளையாடுகிறது? சார்ஜா அல்லது அபுதாபி மைதானங்களில் விளையாட இந்திய அணி பயப்படுகிறதா?. இந்தியா - பாகிஸ்தான் போட்டி முதலில் சார்ஜாவில் தான் நடைபெறவிருந்தது. ஆனால் பின்னர் மாற்றப்பட்டது என சிகந்தர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்