அயர்லாந்து டி20 தொடர் : ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு - ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்த ராகுல் திரிபாதிக்கு அணியில் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.;

Update:2022-06-15 21:09 IST

Image Courtesy : AFP / IPL 

மும்பை,

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்த பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அயர்லாந்தில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்ப்பட்டு அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து ஹர்திக் பாண்டியா அசத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த ராகுல் திரிபாதிக்கு இந்திய அணியில் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இவரை சேர்க்க முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்