உலகக்கோப்பை தொடரில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கும் - பாக். முன்னாள் வீரர்

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Update: 2023-09-18 04:53 GMT

Image Courtesy: AFP

கராச்சி,

6 அணிகள் பங்கேற்ற 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும்,  இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இதில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் எதிர்வரும் உலகக்கோப்பையில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரோகித் சர்மாவின் கேப்டன்சி மேம்பட்டுள்ளது. அவரும் அணி நிர்வாகமும் சிறப்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்தியா இலங்கையை இப்படி தோற்கடிக்கும் என்று நான் கற்பனை செய்யவில்லை.

இங்கிருந்து, உலகக்கோப்பையில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கலாம். நல்ல வேலை செய்தீர்கள் சிராஜ். நீங்கள் இந்தியாவின் வெற்றிக்கு உதவி செய்தீர்கள். உங்கள் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்குக் கொடுத்து நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள்.

இந்தியா உலகக்கோப்பைக்கு அவர்களின் நம்பிக்கையை உயர்த்திய பிறகு செல்கிறது. இந்தியா பின்தங்கிய நிலையில் தொடங்கியது, ஆனால் இப்போது இந்திய அணியின் செயல்பாடு பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கும் கவலையாக இருப்பதாக உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்