ஐசிசி டி20 தரவரிசை: மீண்டும் டாப்-10க்குள் நுழைந்த கோலி... சூர்யகுமாருக்கு பின்னடைவு- முழு பட்டியல்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி உச்சம் கண்டுள்ளார்.

Update: 2022-10-26 11:03 GMT

Image Courtesy: Twitter @imVkohli/ AFP  

துபாய்,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி டாப்-10க்குள் மீண்டும் நுழைந்து உச்சம் கண்டுள்ளார். அதன்படி ஐசிசி இன்று வெளியிட்டுள்ள புதிய டி20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், 15வது இடத்தில் இருந்த விராட் கோலி 5 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு (635 ரேட்டிங் புள்ளி) முன்னேறியுள்ளார்.

இந்த தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 849 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே இந்த பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அதே போல் 2-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சூர்யகுமார், கோலியை தவிர இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 16-வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 19-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

T20I பேட்டிங் தரவரிசை (அக்டோபர் 26 வரை)

1. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 849 புள்ளிகள்

2. டெவோன் கான்வே (நியூசிலாந்து) - 831 புள்ளிகள்

3. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 828 புள்ளிகள்

4. பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 799 புள்ளிகள்

5. ஐடன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா) - 762 புள்ளிகள்

6. டேவிட் மலான் (இங்கிலாந்து) - 754 புள்ளிகள்

7. ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) - 681 புள்ளிகள்

8. பதும் நிஸ்ஸங்க (இலங்கை) - 658 புள்ளிகள்

9. விராட் கோலி (இந்தியா) - 635 புள்ளிகள்

10. முஹம்மது வசீம் (யுஏஇ) - 626 புள்ளிகள்

Tags:    

மேலும் செய்திகள்