ஐ.சி.சி. டி20 தரவரிசை: நியூசிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

Update: 2024-04-24 14:15 GMT

image courtesy: twitter/@ICC

துபாய்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 பொட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

டி20 பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். 2-வது இடத்தில் பில் சால்ட்டும் (இங்கிலாந்து), 3-வது இடத்தில் முகமது ரிஸ்வானும் (பாகிஸ்தான்) உள்ளனர். இதில் பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டிம் சீபர்ட் (நியூசிலாந்து) 3 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தையும், மார்க் சாப்மேன் (நியூசிலாந்து) 12 இடங்கள் முன்னேறி 33-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் அடில் ரஷித் முதலிடத்தில் தொடருகிறார். வனிந்து ஹசரங்கா (இலங்கை) 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷாகீன் அப்ரிடி (பாகிஸ்தான்) 2 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இதே தொடரில் அசத்தி வரும் நியூசிலாந்தின் இஷ் சோதி 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்