உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதில் சிக்கல்: ஐ.சி.சி. நிர்வாகிகள் பாகிஸ்தான் பயணம்

பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட மறுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சித்து வருகிறது.

Update: 2023-05-29 23:29 GMT

Greg Barclay (image courtesy: ICC via ANI)

லாகூர்,

பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட மறுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சித்து வருகிறது. சில ஆட்டங்களை தங்கள் நாட்டில் நடத்திவிட்டு, இந்திய அணிக்குரிய ஆட்டங்களை பொதுவான இடத்தில் வைத்துக் கொள்ளலாம் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் யோசனையையும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா நிராகரித்து விட்டார். இதனால் இந்தியாவில் அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

இரு நாட்டு கிரிக்கெட் உறவில் தொடர்ந்து உரசல்போக்கு நீடிக்கும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சேர்மன் கிரேக் பார்கிளே, தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் 2 நாள் பயணமாக நாளை பாகிஸ்தான் செல்கிறார்கள். அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தியை சந்தித்து உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதை உறுதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தியாவில் அவர்கள் விளையாடுவதற்கு ஏதுவான இடம் குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்க இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்