நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை அறிவித்தது ஐசிசி..!

ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன் ஜாஸ் பட்லருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-13 05:44 GMT

Image Courtesy: Twitter 

துபாய்,

ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கணையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாத சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன் கேப்டன் ஜோஸ் பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் மாத சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தானின் சித்ரா அமீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பையில் அதிரடி காட்டியதுடன் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தார்.

அந்த தொடர் முழுவதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் 49 பந்துகளை சந்தித்து 80 ரன்களை சேர்த்து அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தார்.

சமீபத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அயர்லாந்து அணியை பாகிஸ்தான் அணி வென்றது. இதற்கு சித்ரா அமீன் முக்கிய காரணமாக அமைந்தார். இதேபோன்று 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு ஜாஸ் பட்லர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அதனால் இவர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐசிசி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது அறிவிக்கப்பட்டது குறித்து ஜாஸ் பட்லர் கூறியதாவது-

நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பெற, எனக்கு வாக்கு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இங்கிலாந்து அணி வீரர்களே இதற்கு முக்கிய காரணம். நாங்கள் குழுவாக இணைந்து திறமையை வெளிப்படுத்தியதால் தான் எங்களால் 20 ஓவர் உலக கோப்பை வெல்ல முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்