சிஎஸ்கே அளித்த இந்த வாய்ப்பால் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் - டேரில் மிட்செல்

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரூ.14 கோடிக்கு வாங்கியது.

Update: 2023-12-24 10:27 GMT

image courtesy; twitter/ @ChennaiIPL

சென்னை

10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுப்பதற்கான ஏலம் துபாயில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இதில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரூ.14 கோடிக்கு வாங்கியது.

இந்நிலையில் சிஎஸ்கே அளித்த இந்த வாய்ப்பால் தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என்று டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "சிஎஸ்கே அளித்த இந்த வாய்ப்பால் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஐபிஎல் ஏலத்தின்போது எனது மகளின் 5-வது பிறந்தநாள். பிறந்தநாள் அன்று எனது மகளுக்கு சிறந்த பரிசை அளித்துள்ளேன். நான் எவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டேன் என்பது அவளுக்கு புரியவில்லை. ஆனால், இந்த தொகை பல வழிகளில் என் குடும்பத்திற்கு உதவும். இந்த மிகப்பெரிய ஏலத் தொகையின் மூலம் என் இரு மகள்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள். என்னைப் பொறுத்தவரை இது மிகவும் அருமையான விஷயம். சென்னை அணிக்காக விளையாடுவதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்