என்னுடைய அப்பா அப்படி சொல்வார் என எதிர்பார்க்கவில்லை - அஸ்வின் பேட்டி

ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்றால் பல நாட்கள் அழுததாக கூறியுள்ளார்.

Update: 2024-03-18 14:25 GMT

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான அஸ்வின் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார். மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடினார். இந்த நிலையில் அஸ்வின் தனது கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில், தனது தந்தைக்கும் தனக்கும் நடந்த வாக்குவாதத்தால் தான் மிகவும் மனமுடைந்து போனதாக குறிப்பிட்டார்.

ஒரு முறை இனி கிரிக்கெட் விளையாடுவதா அல்லது வேலைக்கு செல்வதா? என்ற கேள்வி அஸ்வினுக்கு வந்துள்ளது. அதே சமயத்தில் வீட்டில் ஒரு பிரச்சனை எழுந்தது. அப்போது அவரது தந்தையுடன் நடந்த வாக்குவாதத்தில் அவர் கூறிய வார்த்தைகள் அஸ்வினை காயப்படுத்தவே அவர் அறையில் தனிமையில் நீண்ட காலம் அதை நினைத்து அழுது கொண்டே இருந்ததாக குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "என் அப்பா ஒரு விஷயத்தை சொன்னார். என் வீட்டில் ஒரு பிரச்சனை வெடித்தது. அப்போது நான் எனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்படி நடைபெற்ற அந்த வாக்குவாதத்தில் எனது தந்தை சில கடுமையான வார்த்தைகளை கூறவே நான் அதை நினைத்து அழுது கொண்டே இருந்தேன். குறிப்பாக என் அப்பா ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டி பேசியபோது வீட்டில் ஒரு பெரிய பிரச்சனையை வெடித்தது.

அப்போது அவர் ஒரு வாக்கியத்தை கூறினார். "நீ மிகவும் நேர்மையாக இருக்கிறாய். அதனால்தான் உன்னால் எதையும் சரியாக செய்ய முடியவில்லை" என்றார். நான் பொதுவாக உணர்ச்சிவசப்படக் கூடிய நபர் இல்லை. ஆனால், அப்போது நான் அறையில் கதவை சாத்திக் கொண்டு அழுதேன். நீண்ட நாட்களுக்கு அழுதேன். என் அப்பா அப்படி சொல்வார் என நான் எதிர்பார்க்கவில்லை." என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்