இந்தியா - வங்காளதேசம் 2-வது டெஸ்ட் நடைபெறும் ஆடுகளம் எப்படி..? பிட்ச் பராமரிப்பாளர் தகவல்
இந்தியா - வங்காளதேசம் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
கான்பூர்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த ஆடுகளத்தின் தன்மை குறித்து பிட்ச் பராமரிப்பாளர் ஷிவ்குமார் கூறுகையில், "இந்த ஆடுகளம் சென்னை போட்டிக்குரிய உணர்வை தரும். முதல் இரு இன்னிங்ஸ்களில் பவுன்ஸ் இருக்கும். அதே சமயம் முதல் இரு நாட்கள் ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாக இருக்கும். அதன் பிறகு கடைசி 3 நாட்கள் சுழலுக்கு கைகொடுக்கும்" என்று கூறினார்.