இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனியின் சாதனையை சமன் செய்த ஹர்திக் பாண்ட்யா...!

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சாதனையையும் ஹர்திக் பாண்ட்யா முறியடித்துள்ளார்.

Update: 2022-08-30 01:06 GMT

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று முன்தினம் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா ஒரு போட்டியில் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்துள்ளார். ஹர்திக் பாண்டியா மூன்று முறையும், யுவராஜ் 2 முறையும் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்துள்ளனர்.

மேலும், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 - 20) அதிக சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற டோனியின் சாதனையையும் இவர் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா 34 சிக்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி 34 சிக்ஸ் அடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தப்படியாக யுவராஜ் சிங் 31 சிக்ஸ்களுடன் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்