தோனி பிறந்தநாள் - சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2023-07-07 17:24 IST

மும்பை,

கேப்டன் கூல் என்றும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும் உலகத்தால் போற்றப்படும் மகேந்திர சிங் தோனியின் 42வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

உங்கள் ஹெலிகாப்டர் ஷாட் போல நீங்கள் எப்போதும் உயரத்தில் பறக்க வேண்டும் .

பிறந்தநாள் வாழ்த்துக்கள், எம்.எஸ். என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் , யுவராஜ் சிங் ஆகியோரும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்