நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது.

Update: 2022-06-03 16:20 GMT

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட போட்டி என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது . இதன்மூலம், 40 ஓவர்கள் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் தலா 4 விக்கெட்டுகளையும், பிராட் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதனைத்தொடர்ந்து தனது முதல் - இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லி 43 ரன்களும், ஆலி போப் 7 ரன்களும், ஜோ ரூட் 11 ரன்களும், அலெக்ஸ் லீஸ் 25 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்) 1 ரன்னும், ஜானி பேர்ஸ்டோ 1 ரன்னும், மேத்யூ போட்ஸ் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 36 ஒவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 116 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் இன்று 2 வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது . அந்த அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை .இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்சில் 10 விக்கெட்டுக்களை இழந்து 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக , டிம் சவுதி 4 விக்கெட்டும் , டிரண்ட் போல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர் .

இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்