இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார்

Update: 2024-07-27 13:15 GMT

பல்லகெலே,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.இந்த போட்டிக்காக டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்திய அணி:

கில், ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ரியான் பராக், ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா , குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா , தசுன் ஷனகா, தீக்சனா , பத்திரனா , பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா. 

Tags:    

மேலும் செய்திகள்