முதல் டி20 போட்டி; பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து..!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.;

Update: 2024-01-13 01:49 GMT

Image Courtesy: @ICC

ஆக்லாந்து,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. அதன்படி பாகிஸ்தான்- நியூசிலாந்து இடையிலான முதலாவது டி20 ஆட்டம் ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் வெறும் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் கேப்டன் ஷாகின் அப்ரிடி மற்றும் அப்பாஸ் அப்ரிடி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 227 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஆடியது.

நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 46 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பாபர் ஆசம் 57 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி நாளை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்