முதல் ஒருநாள் போட்டி; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

இந்திய அணியில் சாய் சுதர்சன் அறிமுக வீரராக களம் இறங்குகிறார்.;

Update:2023-12-17 13:08 IST

Image Courtesy: @BCCI

ஜோகன்ஸ்பர்க்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

ரோகித், கோலி, பாண்ட்யா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாததால் ராகுல் இந்திய அணியை வழிநடத்துகிறார். இந்திய அணியில் சாய் சுதர்சன் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளார். இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்