முதல் ஒருநாள் போட்டி : பந்துவீச்சில் ஜொலித்த இந்தியா..! ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இந்தியா சார்பில் முகமது ஷமி ,சிராஜ் தலா 3 விக்கெட் , ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.தொடர்ந்து 189ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.

Update: 2023-03-17 11:07 GMT

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகியுள்ளதால், அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்துகிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது .

அதன்படி தொடக்க வீரர்களாக டிரேவிஸ் ஹெட் , மிட்சேல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் டிரேவிஸ் ஹெட் 5 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் ஸ்மித் களமிறங்கினார்,அவர் நிதானமாக விளையாடினார்.

மார்ஷ் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார்.மறுபுறம் ஸ்மித் 22 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்கள் குவித்து வெளியேறினார் .

தொடர்ந்து லபுசேன் 15 ரன்கள் , ஜோஷ் இங்கிலிஷ் 26 ரன்கள் , கேமரூன் கிரீன் 12 ரன்கள் ,ஸ்டாய்னிஸ் 5 ரன்கள் , மேக்ஸ்வெல் 8 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி   10 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா சார்பில் முகமது ஷமி ,சிராஜ் தலா 3 விக்கெட் , ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.தொடர்ந்து 189ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்