நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டான் சேர்ப்பு...!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக ஜோஷ் டங் விலகி உள்ளார்.
லண்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.