20 ஓவர் உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு - அதிரடி வீரர் ஜேசன் ராய் நீக்கம்...!

20 ஓவர் உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அதிரடி வீரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-09-02 09:50 GMT

Image Courtesy: ICC Twitter


7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு இது தான் முதல் உலக கோப்பை ஆகும். அணியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார். இளம் வீரர் பில் சால்ட்டை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. டி-20 உலக கோப்பைக்கு தேர்வு செய்துள்ள அணி தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 7 டி-20 போட்டிகளில் ஆடும் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் டி-20 உலக கோப்பைக்கான அணி விவரம்:-

ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து டி-20 அணி விவரம்:-

ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், பென் டக்கெட், லியாம் டாசன், ரிச்சர்ட் க்ளீசன், டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், லூக் வுட், மார்க் வுட்.

Tags:    

மேலும் செய்திகள்