ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்து வீச்சு - 2வது இன்னிங்சில் ஆஸி. 224 ரன்களுக்கு ஆல்-அவுட்

3வது ஆஷஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்திற்கு 251 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

Update: 2023-07-08 18:24 GMT

லீட்ஸ்,

உலகின் மிகவும் பிரபலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடராகும். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 26 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால், 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிபெற இன்னும் 236 ரன்கள் தேவைப்படும் நிலையில் கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளன. மேலும், இன்று ஆட்டத்தின் 3 நாள் தான் என்பதால் இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்