இங்கிலாந்து-அயர்லாந்து டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இங்கிலாந்து-அயர்லாந்து டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

Update: 2023-06-01 01:17 GMT

லண்டன்,

ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) லண்டன் லார்ட்சில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து உள்நாட்டில் வலுமிக்க அணியாக திகழ்வதால் அயர்லாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆலி ராபின்சன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு அறிமுக வீரராக களம் இறங்குகிறார். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஜானி பேர்ஸ்டோ இந்த டெஸ்டின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார்.

இவ்விரு அணிகள் ஏற்கனவே 2019-ம் ஆண்டு மோதிய டெஸ்டில் இங்கிலாந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்