இங்கிலாந்து, வங்காளதேசம் வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

Update: 2024-08-25 14:14 GMT

துபாய்,

இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிராகவும், வங்காளதேசம் பாகிஸ்தானுக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக 7-வது இடத்தில் இருந்த இங்கிலாந்து 4-வது இடத்திற்கும், 8-வது இடத்திலிருந்த வங்காளதேசம் 6-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.

4-வது இடத்தில் இருந்த இலங்கை 5-வது இடத்திற்கும், 5-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா 7-வது இடத்திற்கும், 6-வது இடத்திலிருந்த பாகிஸ்தான் 8-வது இடத்திற்கும் சரிந்துள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மாற்றமின்றி கடைசி இடத்தில் தொடருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் விவரம்;

1.) இந்தியா - 68.52 சதவீதம்

2.) ஆஸ்திரேலியா - 62.50 சதவீதம்

3.) நியூசிலாந்து - 50.00 சதவீதம்

4.) இங்கிலாந்து - 41.7 சதவீதம்

5.) இலங்கை - 40.00 சதவீதம்

6.) வங்காளதேசம் - 40.00 சதவீதம்

7.) தென் ஆப்பிரிக்கா - 38.89 சதவீதம்

8.) பாகிஸ்தான் - 30.56 சதவீதம்

9.) வெஸ்ட் இண்டீஸ் - 18.52 சதவீதம்

Tags:    

மேலும் செய்திகள்