ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஜோஸ் பட்லர் விலகல் - கேப்டனாக பில் சால்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விலகி உள்ளார்.

Update: 2024-09-05 16:42 GMT

கோப்புப்படம்

லண்டன்,

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் கொண்ட போட்டிகள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இதன்படி முதல் டி20 போட்டி வரும் 11-ம் தேதி சவுத்தாம்டனில் நடைபெறுகிறது.

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணி கேப்டனாக விக்கெட் கீப்பரும், அதிரடி வீரருமான பிலிப் சால்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகிய ஜோஸ் பட்லருக்குப் பதிலாக அணியில் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 தொடரையடுத்து ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது. டி20 தொடரிலிருந்து விலகியுள்ள ஜோஸ் பட்லர் ஒருநாள் தொடரில் விளையாடுவதும் சந்தேகம் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து டி20 அணி:

பில் சால்ட் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கரன், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மவுஸ்லி, ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், ரீஸ் டோப்லி, ரீஸ் டாப்லி.

இங்கிலாந்து ஒருநாள் அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் ஜான் டர்னர்.

Tags:    

மேலும் செய்திகள்