பெண்கள் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்சை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி

உ.பி. வாரியர்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றிபெற்றது.;

Update:2024-02-26 23:10 IST

பெங்களூரு,

2வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஸ்வேதா ஷிவ்ராட் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி 14.3 ஓவரில் 1 விக்கெட்டு மட்டும் இழந்து 123 ரன்கள் குவித்தது. இதன் மூலம் உ.பி.யை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உ.பி. அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய உ.பி. அணியின் துவக்க வீராங்கனை ஷிபாலி வர்மா அதிகபட்சமாக 64 ரன்கள் குவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்