உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து இன்று மோதல்

இன்று நடைபெறும் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்தை சந்திக்கிறது.

Update: 2023-06-30 22:32 GMT

Image Courtesy : @windiescricket twitter

புலவாயோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் தற்போது லீக் முடிந்து சூப்பர்சிக்ஸ் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்தை (பகல் 12.30 மணி) சந்திக்கிறது.

புள்ளிகள் இன்றி சூப்பர்சிக்ஸ் சுற்றுக்கு வந்துள்ள ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைந்து ரன்ரேட்டிலும் ஓங்கி இருந்தால் மட்டுமே அந்த அணிக்கு உலகக் கோப்பை அதிர்ஷ்டம் கிட்டும். ஒரு வேளை இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்