பாக்.எதிரான ஆட்டம்; தவறான ஜெர்சியை அணிந்து வந்த விராட் கோலி - அடுத்து நடந்தது என்ன...?

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.

Update: 2023-10-14 11:26 GMT

Image Courtesy: TWITTER

ஆமதாபாத்,

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடி வரும் பாகிஸ்தான் அணி 33 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் முதல் ஓவரில் பீல்டிங்குக்கு வந்த விராட் கோலி ஆறாவது ஓவரின் போது பதற்றம் அடைந்தார். அப்போது தன் ஜெர்சியை காட்டி, சைகையில் வெளியே அறையில் இருக்கும் சக இந்திய வீரர்கள் மற்றும் குழுவினரிடம் ஏதோ சொல்ல முயன்றார்.

பின் அதே ஓவரில் இஷான் கிஷன் கோலிக்கு மாற்றாக பீல்டிங் செய்ய வந்தார். கோலி ஏன் வெளியே சென்றார் என ரசிகர்களிடையே பெரும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் தோள்பட்டை பகுதியில் மூன்று பட்டை உள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கு முன்பு மூன்று வெள்ளை பட்டைகள் இருந்த இடத்தில் உலகக்கோப்பை தொடருக்காக இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறம் அந்த  பட்டைகளில் இடம் பெற்று இருக்கிறது. விராட் கோலி, பாகிஸ்தான் போட்டிக்கு களமிறங்கும் போது தவறுதலாக மூன்று வெள்ளை பட்டை கொண்ட சட்டையை அணிந்து வந்து விட்டார்.

அதை ஆறாவது ஓவரின் போதே விராட் கோலி கவனித்து இருக்கிறார். உடனே அறைக்கு சென்று அந்த ஜெர்சியை மாற்றிவிட்டு உலகக்கோப்பை தொடருக்கான ஜெர்சியை அணிந்து கொண்டு வந்தார். இதை அறிந்த பின்னரே ரசிகர்களின் குழப்பம் நீங்கியது.


Tags:    

மேலும் செய்திகள்