அமெரிக்காவில் கிரிக்கெட் லீக் - ஒரு அணியை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்
இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கியுள்ளது.
ஐபிஎல்-லை போலவே அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் தொடங்கப்படவுள்ளது. வரும் ஜுலை மாதம் தொடங்கவுள்ள இந்தநிலையில் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கியுள்ளது.
இந்த நிலையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோ இன்று சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், லாஞ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கியிருந்தது.
Everywhere we go... roar and shine @texassuperkings! ⭐ #WhistleForTexas pic.twitter.com/sFHau7l6Ye
— Chennai Super Kings (@ChennaiIPL) April 22, 2023