சென்னை டெஸ்ட்; பீல்டிங்கில் இந்த 4 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - பயிற்சியாளர் டி.திலீப்

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

Update: 2024-09-24 07:39 GMT

Image Courtesy: @BCCI

புதுடெல்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பீல்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நான்கு இந்திய வீரர்கள் குறித்து இந்திய பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் பேசி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பான அத்லெட்டிக் திறமையையும், வேகமான ரிப்ளக்சனையும் சிறப்பாக வெளிப்படுத்தினார். அவர் கல்லி மற்றும் ஷார்ட் லெக்கில் எடுத்த இரண்டு கேட்ச் மூலமாக நாங்கள் ஈர்க்கப்பட்டோம்.

கேஎல்.ராகுல் பீல்டிங் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. அவர் பிடித்த ஒரு கேட்ச் சிறப்பானது. சென்னை வெயிலில் மோசமான சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தும் சிராஜ் மிகத் திறமையான பீல்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் டைவ் செய்து கடினமான கேட்ச் எடுக்க எப்பொழுதும் தயாராக இருக்கிறார்.

விராட் கோலி எப்பொழுதும் தீவிரமான அர்ப்பணிப்புடன் பீல்டிங்கில் இருக்கக்கூடியவர். பயிற்சியிலும் அப்படியே இருப்பார். அவர் இளம் வீரர்களுக்கு இந்த விஷயத்தில் ஊக்க சக்தியாக இருக்கிறார்.

இதை கொஞ்சம் வெளிப்படையாக கூறுவது எனக்கு கடினமாக இருக்கிறது. ஆனாலும் கல்லி மற்றும் ஷார்ட் லெக்கில் ஜெய்ஸ்வால் பிடித்த இரண்டு கேட்ச் அவரை சிறந்த பீல்டர் என்ற இடத்திற்கு இந்த போட்டியில் கொண்டு செல்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்