சிக்சர் மழை பொழிந்த சென்னை வீரர்கள் ..! 235 ரன்கள் குவிப்பு..!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 235 ரன்கள் குவித்துள்ளது

Update: 2023-04-23 15:48 GMT

கொல்கத்தா,

16வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் நிதிஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் , கான்வே களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர்.

நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்த இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர். பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.அடுத்து ரஹானே களமிறங்கினார்.

கான்வே , ரஹானே இணைந்து பவுண்டரி , சிக்ஸர்கள் விளாசினர். கான்வே அரைசதம் பின்னர் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷிவம் துபே , ரஹானேவுடன் இணைந்து சிக்ஸர்கள் பறக்க விட்டார். இருவரும் இணைந்து பந்துகளை நாலாபுறமும் சிக்சருக்கு பறக்க விட்டனர். ரஹானே 24 பந்துகளில் , துபே 21 பந்துகளில் அரைசதம் அடித்தனர்.

பின்னர் 50 ரன்களில் துபே வெளியேறினார்.  ரஹானே அதிரடியை தொடர்ந்து சிக்ஸர்கள் பறக்க விட்டார். இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு235 ரன்கள் குவித்தது.

ரஹானே 71ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து 236ரன்கள் இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்