பட்லர் அரைசதம்: ராஜஸ்தான் 175 ரன்கள் குவிப்பு...!
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார்.;
சென்னை,
16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகின்றன. தொடரில் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னையில் மோத உள்ளன. சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு இந்த ஆட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும்.
இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் களம் இறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 10 ரன்னிலும் வீழ்ந்தார்.
அடுத்து வந்த படிக்கல் 38 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, இதையடுத்து களம் இறங்கிய சாம்சன் ரன் எடுக்காமலும், அஷ்வின் 30 ரன்னிலும் வீழ்ந்தனர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த பட்லர் அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஹெட்மையர் மற்றும் துருஷ் ஷோரல் ஜோடி சேர்ந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை பவுண்டரிகளை அடித்து நொறுக்கியது. இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி ஆட உள்ளது.