பார்டர்-கவாஸ்கர் டிராபி; இது திருத்தம் செய்ய வேண்டிய நேரம் - பேட் கம்மின்ஸ்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பரில் தொடங்க உள்ளது.

Update: 2024-08-31 12:45 GMT

கோப்புப்படம்

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை (பார்டர்-கவாஸ்கர் டிராபி) வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வென்று நீண்ட காலங்கள் ஆகிவிட்டது. இது (பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024/25) நம்பிக்கையுடன் அதை திருத்தம் செய்ய வேண்டிய நேரம் என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது,

ஆஸ்திரேலியாவில் நடந்த கடந்த 2 தொடர்களில் நாங்கள் வெற்றிகரமாக செயல்படவில்லை. எனவே இங்கே இந்தியாவுக்கு எதிராக வென்று நீண்ட காலங்கள் ஆகிவிட்டது. இது நம்பிக்கையுடன் அதை திருத்தம் செய்ய வேண்டிய நேரம். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக பல முறை விளையாடியுள்ளோம். அவர்கள் எங்களை பலமுறை தோற்கடித்துள்ளனர். நாங்களும் அவர்களுக்கு எதிராக நிறைய வெற்றிகளை பெற்றுள்ளோம்.

எனவே எங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது. கடைசியாக இந்தியாவுக்கு எதிராக பொதுவான சூழ்நிலைகளில் விளையாடிய போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நாங்கள் வென்றோம். இது எப்போதும் போட்டி மிகுந்த தொடராக இருக்கும். 10க்கு 10 அடிப்படையில் நான் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என இந்தியாவை எச்சரிக்கும் விதமாக கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்