பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்; சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பிரிஸ்பேன் ஹீட்

பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Update: 2024-01-24 13:08 GMT

Image Courtesy: @BBL / @HeatBBL

சிட்னி,

13-வது பிக் பாஷ் லீக் தொடர் (20 ஓவர் கிரிக்கெட்) ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. பிரிஸ்பேன் தரப்பீல் ஜோஷ் பிரவுன் 53 ரன், ரென்ஷா 40 ரன் எடுத்தனர். சிட்னி அணி தரப்பில் அப்போட் 4 விக்கெட்டுகள் விழ்த்தினார்.

இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் என்ற நிலையில் களம் இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணி பிரிஸ்பேன் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் சிட்னி அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 112 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சிட்னி தரப்பில் அதிகபட்சமாக ஹென்றிக்ஸ் 25 ரன் எடுத்தார். பிரிஸ்பேன் அணி தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 54 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியின் மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


Tags:    

மேலும் செய்திகள்