"எனது கேப்டன்சியின் மிகச்சிறந்த வெற்றி" - பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.;

Update:2024-01-28 19:49 IST

image courtesy; PTI

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில்;- 'நான் கேப்டன்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து நிறையவே சிறப்பான தருணங்களை சந்தித்துள்ளேன். நாங்கள் அனைவரும் இணைந்து சிறப்பான பல வெற்றிகளை பெற்றுள்ளோம். அந்த வகையில் இது எனது கேப்டன்சியின் மிகச்சிறந்த வெற்றி. ஏனெனில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இந்தியாவில் பெரும் முதல் வெற்றி அதனால் இது எனக்கு ஸ்பெஷலானது.

இந்த போட்டியை பொறுத்தவரை நான் தவறு செய்தபோது இந்திய வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்? ரோகித் எவ்வாறு பீல்டிங் பிளான்களை அமைக்கிறார் என்பதை உற்று நோக்கினேன். மேலும் இந்திய ஸ்பின்னர்கள் எவ்வாறு பந்து வீசுகிறார்கள் என்பதை எல்லாம் உற்று கவனித்து இரண்டாவது இன்னிங்சின்போது நான் அதை நிவர்த்தி செய்தேன்.

அந்த வகையில் இந்த போட்டியில் எங்களது வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடித் தந்துள்ளனர். குறிப்பாக பேட்டிங்கில் போப்பும், பந்துவீச்சில் ஹார்ட்லியும் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது. ஒல்லி போப் அடித்த இந்த சதம் ஒரு இங்கிலாந்து வீரராக இந்தியாவில் விளையாடப்பட்ட மிகச்சிறப்பான இன்னிங்ஸ்' என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்